![]() |
நத்தம்பட்டி பெண்கள் கேப்பை கதிர் அறுத்தல் |
நிலத்தில் இறங்கி கதிர் அறுத்து தானியத்தை பிரித்து கொடுக்கும் கருவி
எங்கள் அனுபவ துளிகள் இதோ:
- ஒரு மணி நேரத்திற்கு மெஷின் வாடகை 2500 ரூபாயும் மெஷின் வந்து போகும் செலவுக்கு 2500 ரூபாயுமாக மொத்தம் 5000 ருபாய் செலவானது.
- கையில் அறுவடை செய்ய இரண்டு நாட்களாக 10 பெண்கள் வந்து சென்ற செலவு மொத்தம் 8000 ருபாய். மேலும் கதிரில் இருந்து தானியத்தை பிரித்தெடுக்க சிறிய மெஷின் வாடகை 1000 ருபாய். அறுத்த கதிரை களத்திற்கு எடுத்து வந்து மூட்டை பிடிக்க ஊழியர்கள் ஊதியம் 1000 ருபாய். மொத்த செலவு 10000 ருபாய்
- மெஷின் அறுவடையில் சேதாரம் 25% மேல் இருக்கும். கை அறுவடையில் சேதாரம் மிக குறைவே
- அறுவடை ஆரம்பிக்கும் முன்னரே நல்ல கதிர்களை இனம் கண்டு அடுத்த முறை பயிரிட விதைகளை சேகரித்தல் நல்லது
- பொருளாதார ரீதியில், மெஷின் அறுவடையில் சிறிது சேமிப்பு வந்தாலும், மனித வள மேம்பாடு மற்றும் உள்ளூர் பொருளாதார மேம்பாடு, வட்டார வளர்ச்சி ஆகிய தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்தால், கையால் அறுவடை செய்வதே உகந்ததாய் படும்.
மேலும், இவ்வகை பெரிய இயந்திரங்களில் ஒவ்வொரு தானியத்திற்கும் தனித்தனி பிட்டிங்குகள் வாங்க வேண்டும். நெல்லுக்கு, மக்காச்சோளத்திற்கு எல்லாம் நம் வட்டாரத்தில் நிறைய பேரிடம் பிட்டிங்குகள் உள்ளது. ஆனால் இப்போதெல்லாம் கேப்பை (தே கல்லுப்பட்டி ஊராட்சியில்) நிறைய இடங்களில் பயிரிடப்படாததால், அறுவடை மெஷின் இருக்கும் பல பேரிடம் இந்த கேப்பைக்குரிய பிட்டிங் இருப்பதில்லை.....
No comments:
Post a Comment