ஆனி - ஆடி
இது வேப்பங்கொட்டை உதிரும் காலம்.
வேப்பங்கொட்டை இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கியமான மூலதனம். அதிசய குணங்களை கொண்ட இந்த இயற்கை வளத்தை ஆங்காங்கே பெண்களும் முதியோர்களும் சேகரித்து கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.
வேப்ப விதையின் கருவில் இருக்கும் அஜாதிரசடின் (azadirachtin ) என்ற சேர்மம் இன்று விவசாயம், மருத்துவம், அழகு சாதனம் என்று பல தொழில் துறைகளில் உபயோகிக்கப்படும் ஓர் முக்கியமான மூலப்பொருளாகும். இன்று கடைகளில் கிடைக்கும் அநேக வேப்பம் புண்ணாக்கு இந்த அஜாதிரசடின் சேர்மத்தை பிரித்த பின் அரைத்தவையே. அஜாதிரசடின் இல்லாத புண்ணாக்கு நமக்கு அதிகம் பயன் தராது. எனவே, வேப்ப விதைகள் பெரு வர்த்தகர்களை போய் சேராமல், நாமே அவற்றை கோமியத்தில் 2 நாள் ஊற வைத்து வேண்டும் வண்ணம் உபயோகித்து கொள்ளுதலே நல்லது.
'நம்மூர் இயற்கை வளம் நமக்கே சொந்தம்' என்ற மனநிலை தற்சார்பும் சந்தோஷமும் கொண்ட வாழ்க்கைக்கு அடிப்படையாகும். இன்று நம்மை அடிமையாக்கி வரும் விசைகளை நிர்மூலாமாக்க இந்நிலைப்பாடு ஒன்றே போதும்!!
ஆதலால், வேப்ப விதை என்ற இந்த அரிய பொக்கிஷத்தை சேகரித்தல்-சந்தை விலையில் கொள்முதல் செய்தல்-அந்தந்த பகுதியில் இயற்கை விவசாயம்/சார்ந்த தொழில்கள் செய்து வருவோர்க்கு கொண்டு சேர்த்தல் ஆகிய பணிகள் நம் எல்லோருடைய கடமையாகுமல்லவா?
சேகரித்த வேப்ப விதைகளை கொள்முதல்/விநியோகம் செய்ய உதவி தேவைப்பட்டால் எங்களை அணுகவும்:
குமரப்பா தன்னிறைவு பண்ணையம் - 99802 61767