வளர்பிறை
பண்ணைக்கு 7 பெண்கள் வேலைக்கு வர ஆரம்பித்துள்ளார்கள்.
80 சென்டில் பயிரிடப்பட்டிருந்த எள்ளு அறுவடை செய்யப்பட்டு வயலிலேயே பாதியும் கால்நடை கொட்டாரத்தில் பாதியும் காய வைக்கப்பட்டது. ஆனால் மழையின் காரணமாக, ஏராளமான பூச்சிகளும் பூஞ்சையும் தாக்கி முழு பயிரும் அழிந்துவிட்டது.
அரை ஏக்கரில் போடப்பட்ட பாசிப்பயறு அறுவடை செய்யப்பட்டு 14 கிலோ சேமிப்பறையில் வைக்கப்பட்டுள்ளது.
தேய்பிறை
வெள்ளாமை
ஐய்ப்பசி கடைசியில் தொடங்கிய குதிரைவாலி அறுவடை 4 ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 19 ஆள் நாட்கள் ஆயிற்று 1.5 ஏக்கர் அறுவடை செய்ய. அறுவடை செய்யபட்ட கதிரை கால்நடை கொட்டாரத்தில் 2 நாட்கள் காய விட்டு, பதனபடுத்தும் கருவி கொண்டு, தானியங்கள் பிரிக்கப்பட்டு, கண்டெய்னர் உள்ளே உலர்த்த விடபட்டது. பாப்பையாபுரம் நாகராஜ் (99435 95304) அவரது தானியம் பிரித்தெடுக்கும் மெஷினை நன்றாக பராமரித்து சுத்து வட்டார மக்களுக்கு உதவுகிறார்.
இப்போதெல்லாம் எல்லோரும் பெரிய மெஷினை நேராக வயலுக்கே கொண்டு சென்று செடியில் இருந்தே தானியத்தை பிரித்தெடுக்கும் விதத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில், கதிர் அறுத்து களத்திற்கு தூக்கி செல்லும் கூலியாட்கள் செலவு மிச்சமாகிறது. ஆனால், இதில் 25% தானியம் வீணாகிறது.
பழத்தோட்டம்
20 Nov - இன்று கொய்யா தோட்ட களை எடுப்பு ஆரம்பிக்கபட்டுள்ளது.
கால்நடை
5 ஐய்ப்பசி: பண்ணைக்கு 5 ஆடுகள் கொண்டு வரப்பட்டன. ஒரு தாய் ஆடும் 4 குட்டிகளும்! தாய் ஆடும் ஒரு குட்டி ஆடும் சினையாக உள்ளதாக சொல்கிறார்கள். மொத்த விலை 25 ஆயிரம்.
உர தயாரிப்பு
பண்ணைக்கு 8 டிராக்டர் லோடு மாட்டு சாணம் வந்திறங்கியது.
மற்ற தகவல்கள்
பண்ணைக்கு வந்த புதிய கருவி:
- சிவகாசி பழ கடையில் வாங்கிய பழைய எடை மெஷின்
- பழைய குளிர் சாதன பெட்டி ஒன்று வாங்கி ரிப்பேர் செய்யப்பட்டது
- 4 எண்ணம் பண்ணை அருவாள் - சிவகாசியிலிருந்து
- 5 எண்ணம் களை வெட்டுவான் - சிவகாசியிலிருந்து